இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் 500 பேருந்துகள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாகவும், அவற்றில் 250 பேரூந்துகள் கிராமிய போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்சாரத்தில் இயங்கும் பஸ் வண்டிகளை பொது போக்குவரத்து சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், 2030ஆம் ஆண்டு காலப்பகுதியில் 30சதவீதமளவில் பொது போக்குவரத்து சேவையில் அதனை ஈடுபடுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் 500 பேருந்துகள் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்று பொது போக்குவரத்து சேவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.