Home உலக செய்திகள் தாய்லாந்தில் தஞ்சமடையும் கோட்டபாய!

தாய்லாந்தில் தஞ்சமடையும் கோட்டபாய!

67
0

இலங்கையில் இருந்து தப்பி ஓடி சிங்கப்பூரில் கடந்த 4 வாரங்களாக தங்கியிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ நாளை (11) அங்கிருந்து புறப்பட்டு தாய்லாந்து நாட்டிற்கு தப்பிச் செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கம் முதலில் 2 வாரங்கள் வீசா வழங்கியிருந்த நிலையில் கோட்டபாய ராஜபக்‌ஷவின் வேண்டுகோளுக்கிணங்க மேலும் 2 வாரங்கள் வீசாவை நீடித்திருந்ததோடு மேலதிகமாக வீசா வழங்க முடியாது எனவும் அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே அங்கிருந்து வெளியேறவேண்டும் என்ற கட்டாய நிலையில் சவூதி அரேபியாவிற்கு தப்பிச்செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.

இறுதியில் தற்போது தாய்லாந்திற்கு தப்பியோட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.