Home செய்திகள் பிரதேச சபை உறுப்பினரை சுட்டுக் கொன்ற நபர் குவாறியில் வீழ்ந்து மரணம்!

பிரதேச சபை உறுப்பினரை சுட்டுக் கொன்ற நபர் குவாறியில் வீழ்ந்து மரணம்!

55
0

கடந்த வாரம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுவெல பிரதேசத்தில் உள்ள கிரானைட் குவாரி ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

கடுவெல வெய்க்கவத்தை வீதியிலுள்ள கிரானைட் குவாரி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்ற போது, ​​பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் சந்தேக நபர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான சந்தேக நபர், அத்துருகிரிய, ஒருவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் அங்கு உயிரிழந்ததாகவும், சந்தேக நபரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

கிரானைட் குவாரி ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படும் குறித்த சந்தேக நபர் கடவத்தையில் உள்ள இஹல பியன்வல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய துவான் ஷிரார் எனவும், இவர் கிரிமினல் கும்பலின் தலைவன் அங்கொட லொக்காவின் நெருங்கிய கூட்டாளி எனத் தெரிவிக்கப்படுகிறது.