கழுத்து நெரிக்கப்பட்ட தடையங்களுடன் கால்வாய் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
காலி – மினுவந்தெனிய பொல்ஹகொட பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம் 35 வயதுடைய பெண் எனவும், கறுப்பு நிற பாவாடையும், சிவப்பு நிற மேலாடையும் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது குறித்த சடலம் வைக்கப்பட்டுள்ளது.