தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பில் பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவிக்கையில்;
தமிழீழ விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் புனர்வாழ்வு அல்லது சமூகமயப்படுத்தும் நடவடிக்கைகளின் பின்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் .
இதுகுறித்து இந்த செயலணியின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. இதில் 43 பரிந்துரைகள் உள்ளடங்குகின்றன.
அவற்றில் தற்போது அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறான கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு நடவடிக்கையுடன் விடுதலை செய்யப்பட வேண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.