ஸ்டேட் வங்கியில் ரூபா. 68,340,000/= மோசடி செய்ய உதவிய பெண் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான குறித்த பெண் சம்பந்தப்பட்ட வங்கியின் கடன் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவிப் பொது மேலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, கடவத்தை பிரதேசத்தில் உள்ள அரச வங்கியொன்றில் இருந்து 48 தனிநபர் கடன் கோப்புகள் ஊடாக பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட னபரான கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய சந்தேகநபர், கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். என பொலிஸார் தெரிவித்தனர்.