நவகமுவ பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த இரண்டு ஆண்கள் தொடர்பான புகாரை விசாரிக்க பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, ஒருவர் மற்றவரை கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.
உயிரிழந்தவர் கரவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கத்தியால் குத்திக் கொலை செய்த 42 வயதான நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.