Home உலக செய்திகள் இலங்கை – மனித உரிமை ஆர்வலர்கள் இலக்கு வைக்கப்படும் நாடு: மேரி லோவ்லர்

இலங்கை – மனித உரிமை ஆர்வலர்கள் இலக்கு வைக்கப்படும் நாடு: மேரி லோவ்லர்

69
0

இலங்கை என்பது மனித உரிமை ஆர்வலர்கள் இலக்குவைக்கப்படும் நாடாக இருந்துவருவதாகவும், யோசப் ஸ்டாலினின் கைது இடம்பெற்றிருக்கக் கூடாது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பாதுகாவலர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் அதற்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகள், கைதுகள் தொடர்பில் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அவ் ஊடகத்திற்கு மேலும் தெரிவிக்கையில்…

அமைதியான ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கும், தாங்கள் நெருக்கடியில் உள்ள போது தங்கள் மீதான விமர்சனங்களை தவிர்ப்பதற்கும் அல்லது கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கங்கள் தந்திரோபாயங்களையும், நீதிமன்ற உத்தரவுகளையும், நடைமுறை மற்றும் விதிமுறைகளையும் பயன்படுத்திக் கொள்கின்றன. இது உலகமெங்கிலும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

இலங்கையில் பல தரப்பினரும் ஒன்றுபட்டு ஆர்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். அதனை அடக்க அரசாங்கம் பலவற்றை செய்கின்றது. அதில் இடம்பெறும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருகிறேன். எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பின், ஆணையின் கீழ் மனித உரிமை பாதுகாவலர்கள் எவரெல்லாம் இலக்குவைக்கப்படுகிறார்களோ அவர்கள் குறித்து நான் பேச வேண்டும்.

அந்த வகையில் அண்மையில் இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலினின் கைது இடம்பெற்றிருக்கக் கூடாது. அவர் ஓர் சிறந்த மனிதர். நல்ல மனித உரிமை செயற்பாட்டாளர். அவரின் நிலைப்பாடுகள் பற்றியும், அவரது செயற்பாடுகள் பற்றியும் எனகு நன்கு தெரியும். ஐக்கிய நாடுகள் சபை ஏற்ருக்கொண்டுள்ள மனித உரிமை பாதுகாவலர்கள் என்ற வரைவிலக்கணத்தின் கிழ் அவர் ஒரு மனித உரிமை பாதுகாவலர் என்பது எனக்கு தெரியும்.

குற்றவாளிகளாக சித்தரித்து, அச்சுறுத்தி கைது செய்து, அரசாங்கங்கள் முதலில் கட்டுப்படுத்த முனையும் நபர்களாக மனித உரிமை பாதுகாவலர்கள் என்பது எனக்கு தெரியும். ஏனென்றால் அவர்களே அரசாங்கங்களின் அநீதிக்கும், ஊழலுக்கும், அதைகாரம் மற்றும் வெளிப்படைத்தன்மை இன்மை என்பவற்றிற்கு எதிராக முதலில் சவால் விடுகின்றார்கள்.

நியாயமான ச்மூகத்தை உருவாக்குவதற்கு எமக்கு மனித உரிமை பாதுகாவலர்கள் அவசியம். ஆனால் பல ஊழல் மிக்க நியாயமற்ற அரசாங்கங்கள் அதனை விரும்புவதில்லை என்பதே உண்மை என அவர் தெரிவித்தார்.