Home தமிழகச் செய்திகள் அடுத்த வாரம் முதல் யாழ்ப்பாணத்திற்கும், தமிழகத்திற்க்கும் இடையிலான விமான சேவை!

அடுத்த வாரம் முதல் யாழ்ப்பாணத்திற்கும், தமிழகத்திற்க்கும் இடையிலான விமான சேவை!

73
0

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்தவாரம் இரத்மலானை மற்றும் சென்னை போன்ற இடங்களுக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும், சென்னைக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு சில வாரங்களிலேயே அவை கொரோனா இடர்கால நிலைமையை சுட்டிக்காட்டி கடந்த 2 வருடங்களாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் சர்வகட்சி ஆட்சி, நாட்டின் பொருளாதார மீட்சி என பேசிக்கொண்டு பலவற்றை செய்யப்போவதாக அரசாங்கம் போடும் நாடகத்தில் ஓர் அங்கமாகவும், இந்தியாவை திருப்தி படுத்தும் நோக்கிலும் தற்போது மீண்டும் யாழ்ப்பாணத்திற்கும், தமிழகத்திற்கும் இடையிலான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிவிப்பிற்கமைய அடுத்த வாரம் யாழ்ப்பாணத்திற்கும், தமிழகத்திற்க்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்படுமா…? அப்படியே ஆரம்பிக்கப்பட்டாலும் எவ்வளவு காலம் அது நீடிக்கும் என்பது கேள்விக்குரியதே!