
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் யோசப் ஸ்ராலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று (05) ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையம் முன்பாக இடம்பெற்று வருகிறது.
இதன் போது .
- * மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடிய யோசப்ஸ்ராலின் கைதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
- * யோசப் ஸ்ராலின் உட்பட்ட அனைத்து ஜனநாயக வழி போராட்டக்காரர்கள் அனைவரையும் உடன் விடுதலை செய்.
- * ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் பாசிசவாதத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்.
- * ஜனநாயக போராட்டக்காரர்கள் மீதான பொய் வழக்குகளை உடன் நிறூத்து.
- * ஜனநாயக வழி போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களை உடன் நிறுத்து.
போன்ற கோஷங்களை தாங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.