Home செய்திகள் கொஸ்வத்தே மகாநாம தேரர் பிணையில் விடுதலை!

கொஸ்வத்தே மகாநாம தேரர் பிணையில் விடுதலை!

72
0

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொஸ்வத்தே மகாநாம தேரருக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று பிணை வழங்கியுள்ளார்.

மஹாநாம தேரர் நேற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ரூபா 100,000/= சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில், ஜூலை 28ஆம் தேதி, மஹாநாம தேரரையும், தொழிற்சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலினையும் கோட்டை போலீஸார் கைது செய்திருந்த நிலையிலேயே தேரர் மட்டும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.