
இங்கிலாந்தின் – தென்கிழக்கு லண்டனில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைபெற்று வருகிறார்.
இன்று (05) வெள்ளிக்கிழமை கிரீன்விச், க்ரீக் ரோட்டில் 14:31 மணிக்கு ஒரு நபர் துப்பாக்கியுடன் இருப்பதாக பிரித்தானியாவின் அவசரசேவை பிரிவிற்கு (999) கிடைத்த சில புகார்கள் அடிப்படையில் அங்கு விரைந்துள்லனர்.
நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் “semi-automatic 9mm or Glock-style gun” வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மெட்றோபொலிற்ரின் பொலிஸார் குறித்த சந்தேகநபரை இனம் கண்டு சந்தேகநபரான குறித்த நபரை கையை உயர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கூறியுள்ளனர்.
அதற்கு குறித்த நபர் மறுக்கவே அவரது இடது கையில் கைதுப்பாக்கி ஒன்று இருப்பதாக அவதானித்த பொலிஸார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
உடனடியாக air ambulance மூலம் வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற பொலிஸார் அவருக்கான சிகிச்சைகளை வழங்கிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய இச் சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேகநபராலோ அன்றி பொலிஸாராலோ வேறு எவருக்கும் எந்த சேதமுல் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.