Home விளையாட்டு இங்கிலாந்தில் – பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற யுபுன் அபேகோன்!

இங்கிலாந்தில் – பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற யுபுன் அபேகோன்!

13
0

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இலங்கை நேரப்படி நேற்று (04) அதிகாலை 2 மணிக்கு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை யுபுன் 10.14 விநாடிகளில் பூர்த்தி செய்து மூன்றாம் இடம் பிடித்தார்.

இந்தப்போட்டியில் கென்ய வீரர் பெர்டினாண்ட் ஓமயாலா போட்டித்தூரத்தை 10.02 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றிருந்ததுடன், தென்னாபிரிக்க வீரர் அகானி சிம்பைன் 10.13 விநாடிகளில் போட்டித்தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இதில், 00.01 விநாடி வித்தியாசத்தில் யுபுன் அபேகோன் வெள்ளிப்பதக்கத்தை தவறவிட்டிருந்தார்.

இதன்மூலம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பதக்கம் ஒன்றை வென்ற முதல் ஆசிய வீரராக யுபுன் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.