நேற்றையதினம் (03) பாராளுமன்றத்தின் பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட இலங்கை விமானப்படையின் தானியங்கி ஆளில்லா விமானம் தியவன்னா ஓயாவில் விழுந்து நொறுங்கியுள்ளது.
இலங்கை விமானப்படையின் ஆளில்லா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தியவன்னா ஓயாவில் விழுந்து நொறுங்கியதாக இலங்கை விமானப்படையின் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
தியவன்னா ஓயாவின் ஆழத்தில் இருந்து ஆளில்லா விமானத்தை மீட்பதற்காக இலங்கை கடற்படை டைவர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.