பிரித்தானியாவில் எரிசக்தி (Gas) விலை, சராசரி குடும்பத்திற்கு அக்டோபரில் இருந்து ஆண்டுக்கு £3,359ஐ எட்டும் என்றும், குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு இறுதி வரை அந்த அளவிற்குக் குறையாது என்றும் எரிசக்தி ஆலோசனை நிறுவனமான கார்ன்வால் இன்சைட் கணித்துள்ளது.
பில்களின் விலை வரம்பு, வரும் ஆண்டு (2024) ஜனவரி முதல் £3,616 ஆகவும், ஏப்ரல் முதல் £3,729 ஆகவும் உயரும் என்று அந் நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
கொரோனா இடர் காரணமாக பலவிதமான பாதிப்புக்களையும், பொருளாதார நெருக்கடியையும் எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு இச் செய்தி மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மறுக்கமுடியாதது.