அரசியல் அமைப்பின் 19வது திருத்தம் மற்றும் பாராளுமன்ற கண்காணிப்பு குழு முறமையை மீள அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி ரணீல் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக அழைப்பு விடுத்து ஜனாதிபதியால் கடந்த மாத இறுதியில் அனுப்பப்பட்டிருந்த கடிதத்திற்கு பதிலளித்து அனுப்பியுள்ள கடிதத்திலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார்.