நடந்து முடிந்த கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என இலங்கை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை அவ்வாண்டின் ஓகஸ்ட் மாதத்தில் நடாத்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில் கோவிட் இடர் காரணமாக இவ் ஆண்டு (2022) பெப்ரவரியிலேயே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.