Home தாயக செய்திகள் இலங்கையின் – 9வது பாராளுமன்றத்தின் 3வது அமர்வு இன்று ஆரம்பம்:

இலங்கையின் – 9வது பாராளுமன்றத்தின் 3வது அமர்வு இன்று ஆரம்பம்:

59
0

இலங்கையின் – ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (03-08-2022) புதன்கிழமை இன்னும் சற்று னேரத்தில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.

அரசியலமைப்பின் 33வது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முற்பகல் 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

துப்பாக்கி வணக்கங்கள் அல்லது வாகன அணிவகுப்பு எதுவும் இருக்காது எனவும், மாறாக, ஜனாதிபதியை முப்படை அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு இடம்பெறும் எனவும் நாடாளுமன்றத்தின் சார்ஜென்ட் அட்-ஆர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும், இம்முறை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ சின்னத்திற்கு பதிலாக ஜனாதிபதியின் இருக்கையில் அரச சின்னம் குறிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது எனவும் இம்முறை தேசியக் கொடியே ஏற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்த நிகழ்விற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள், பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட பல அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் நரேந்திர பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார்.