Home உலக செய்திகள் ஶ்ரீலங்கா இராணுவத்தை சேர்ந்த “நிக்லஸ்” கொமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் தோல்வி.

ஶ்ரீலங்கா இராணுவத்தை சேர்ந்த “நிக்லஸ்” கொமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் தோல்வி.

104
0

இங்கிலாந்தில் இடம்பெறுவரும் “கொமன்வெல்த் விளையாட்டு விழா 2022” இல இன்றைய தினம் குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றிய விட்டாலிஸ் நிக்லஸ் தோல்வியடைந்துள்ளார்.

இலங்கையின் – கிளிநொச்சியைச் சேர்ந்த நிக்லஸ் ஶ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய (02) தினம் பேர்மிங்ஹாம் இல் நடைபெற்ற குறித்த போட்டியில் Samoa நாட்டைச் சேர்ந்த Marion Faustino AH TONG ஐ எதிர்கொண்டு விளையாடிய “விட்டாலிஸ் நிகலஸ்” தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விட்டாலிஸ் நிக்லஸ் இலங்கைத் தமிழராக அடையாளப்படுத்தப்பட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அவர் ஓர் ஶ்ரீலங்கா இராணுவத்தை சேர்ந்தவர் என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருவது சுட்டிக்காட்டத்தக்கது.