Home செய்திகள் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் நிமால் சிறீபால டி சில்வா!

மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் நிமால் சிறீபால டி சில்வா!

67
0

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக இன்று (02) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருந்தார்.

இந்த நிலையிலேயே அவர்மீதான குற்றச்சாட்டை விசாரிக்க மூவரடங்கிய ஆணைக்குழு நியமிக்கப்பட்அடிருந்தது. விசாரணை முடிவில் குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்து குறித்த ஆணைக்குழு உரிய அறிக்கையை கையளித்ததின் அடிப்படையில் இன்று அவர் மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.