“சிங்கப்பூர்” ற்கு வந்த வெளிநாட்டவர் ஒருவரை அவரது நாட்டு அரசாங்கம் தேடினால், அது குறித்து அந்த நாடு உரிய முறையில் வேண்டுகோள் விடுத்தால் சட்டத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் உரிய நடவடிக்கை எடுக்கும் என சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனதிபதி “கோட்டபாய ராஜபக்ஷவை” கைது செய்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என சிக்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுத்துமூலம் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.