Home உலக செய்திகள் இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – வன்முறைகளை பின்பற்ற வேண்டாம்: பிரிட்டன்

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – வன்முறைகளை பின்பற்ற வேண்டாம்: பிரிட்டன்

78
0

இலங்கை எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு அமைதியான முறையிலும், ஜனநாயக ரீதியிலும் அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கி தீர்வை காணுமாறு வலியுறுத்துவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய இணை அமைச்சர் Amanda Milling தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை உட்பட இலங்கையின் சூழ்நிலையை மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் கூறியுள்ள அவர், அனைத்து தரப்பினரையும் வன்முறைகளை பின்பற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

சர்வதேச அரங்கில் பிரிட்டனுக்கு குறிப்பிடத்தக்க “குரல்” உள்ளது என சுட்டிக்காட்டி உள்ள Amanda Milling, சர்வதேச நாணய நிதியத்தில் ஐந்தாவது பெரும் பங்கை பிரிட்டன் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.