Home செய்திகள் தமிழகம் – கோவையில், இலங்கை தமிழ் பெண் தற்கொலை!

தமிழகம் – கோவையில், இலங்கை தமிழ் பெண் தற்கொலை!

81
0

தமிழகம் – கோவை மாவட்டம் கோட்டூர் இலங்கை தமிழர்கள் முகாமில் வசித்து வந்த இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் விசமருந்தி தற்கொலை செய்துள்ளார்.

27 வயதுடைய பவித்திரா பிரதீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வரும் பிரதீபன் மனைவி பவித்திராவிடம் சண்டை போட்டுக்கொள்வதாக முகாம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நீ இறந்தால் தான் எனக்கு நிம்மதி என கணவன் கூறியமையால் விரக்தியடைந்திருந்த பவித்திரா விசமருந்தி தற்கொலை செய்வதற்கான காரணம் என கூறப்படுகிறது.

பவித்திராவின் தந்தை பொலிஸாருக்கு வழங்கிய புகாரின் அடிப்படையில் பவித்திராவை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்தின் பேரில் பிரதீபனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.