Home செய்திகள் தனிஸ் அலிக்கு ஆகஸ்ட் 15 வரை விளக்கமறியல் நீடிப்பு!

தனிஸ் அலிக்கு ஆகஸ்ட் 15 வரை விளக்கமறியல் நீடிப்பு!

53
0

தனிஸ் அலியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (01-08-2022) திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அரகலயா செயற்பாட்டாளர் தனிஸ் அலி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்காகவும், ஒலிபரப்பை தடை செய்யக் கோரியதற்கான குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நிலையில் கடந்தவாரம் விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபருக்கு பிணை வழங்குவது தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தேகநபரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்