எரிபொருள் பெற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லாத பஸ்களின் அனுமதிப்பத்திரம் இன்று (1) முதல் நிறுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, புதிய பாடசாலை பஸ் சேவை இன்று (1) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.
‘சிசு-செரிய’ பேருந்துகளுக்கு கூடுதலாக 40 தனியார் பேருந்துகள் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக சேர்க்கப்படும் என்று NTC-ன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.
புதிய பாடசாலை பஸ் சேவையின் 1ம் கட்டம் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார். இந்த பஸ்களில் பள்ளி மாணவர்கள் வழக்கமான பஸ் கட்டணத்தில் பயணம் செய்யலாம்.