
வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் இன்று (31) இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆயுதம் தாங்கிய குழு ஒன்று குறித்த நபரை சரமாரியாக தாக்கியதாகவும், ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆச்சிபுரத்தை சேர்ந்த 30 வயதுடைய யோன்சன் (ரஞ்சா) என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.