Home செய்திகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, இருவர் காயம்:

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, இருவர் காயம்:

75
0

காலி – கம்மெத்தேகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 2 பேர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (31) பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால், ரி56 வகை துப்பாக்கியினால் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்து, கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் காயம்மடைந்த 47 மற்றும் 29 வயதுடைய இருவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.