
கொட்டாஞ்சேனையில் நேற்று இரவு 51 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விவேகானந்தா மாவத்தையில் தாக்குதலுக்கு உள்ளானவர் மற்றொருவருடன் வீதியில் அருகில் உரையாடி கொண்டிருந்தபோது உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பின்னர் ஒருவர் உந்துருளியிலிருந்து இறங்கி வந்து காயமடைந்த நபரின் தலைமீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்கின்றதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் பின்னர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இரத்தப்பெருக்கு ஏற்பட்ட நபரை மிக அருகில் வந்து மீளவும் தலையில் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்திருப்பார்.
இவை மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுவதோடு, இப்படியான தாக்குதல்கள் சிறீலங்கா இராணுவத்தினரின் சிறப்பு மோட்டார் சைக்கிள் படையணியாலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் கடந்த 4 மாதங்களாக ஈடுபட்டிருந்தவர்களில் தீவிரமாக செயற்பட்ட மற்றூம் இராணுவத்தினரோடு மோதிக்கொண்ட அல்லது விவாதித்த நபர்களையே இவ்வாறு இலக்கு வைத்து கொலை செய்து வருவதாகவும், பின்னர் இனந்தெரியாதோர் தாக்குதல் என முடிப்பதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
