பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞ்ஞன் ஒருவருக்கு 116 வருட சிறை விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கைவிடப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல் செய்தார் எனும் குற்றச்செயலுக்காக அமெரிக்க உளவுப்பிரிவினரால் தேடப்பட்டு வந்த குறித்த இளைஞ்ஞனை இன்று அமெரிக்க உளவு பிரிவினர் மொறோக்கோ விமான நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் அமெரிக்க நிறுவனங்களின் கணணிகளில் ஊடுருவி சைபர் தாக்குதல் செய்து பல தரவுகளை திருடினார் எனும் குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே அவர் தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் குறித்த இளைஞ்ஞநை அமெரிக்க உளவுத்துறையினர் கைது செய்துள்ள நிலையில் அவருக்கு 116 வருட சிறை விதிக்க கோரப்பட்டுள்ளது.