பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட சர்வகட்சி ஆட்சியே ஒரே வழி என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று, வவுனியாவில் அமைந்துள்ள, இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில், கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒரு சர்வகட்சி ஆட்சியை அமைக்க விரும்புவதாக இருந்தால், அதனை தாம் வரவேற்பதாகவும், பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட, அதுதான் ஒரே வழி எனவும் தெரிவித்துள்ள சுமந்திரன், ஆனால், அது, உண்மைத் தன்மையான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும் எனவும், தெரிவித்துள்ளார்.