Home உலக செய்திகள் பிரித்தானியாவின் புதிய பிரதமர் போட்டியில் முன்னணியில் “Liz Truss”

பிரித்தானியாவின் புதிய பிரதமர் போட்டியில் முன்னணியில் “Liz Truss”

75
0

பிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் எகின்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வரும் நிலையில் பிரித்தானியாவில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் “லிஸ் டிரஸ்” (Liz Truss) 89.29 சதவீதம் வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் பிரித்தானியாவின் முன்னாள் Chancellor ஆன இந்திய வம்சாவளி எம்.பி ரிஷி சுனாக் (Rishi Sunak) ற்கும், பிரித்தானியாவின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான மாநில செயலாளர் மற்றும் பெண்கள் மற்றும் சமத்துவங்களுக்கான அமைச்சர் “லிஸ் டிரஸ்” (Liz Truss) ற்கும் இடையில் கடும் போட்டி நிலவிவந்தது.

அண்மைய நாட்களாக நடைபெற்றுவந்த விவாதங்களின் அடிப்படையிலும், மக்களுக்கு தமது கொள்கை தொடர்பிலும், எதிர்கால செயற்திட்டம் தொடர்பிலும் விளக்கியதன் அடிப்படையிலும் போட்டி போட்டவர்கள் மத்தியில் இருந்து அதிக ஆதரவை பெற்றவராக “லிஸ் டிரஸ்” (Liz Truss) திகழ்கிறார்.

இதனால் “லிஸ் டிரஸ்” (Liz Truss) பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பே அதிகம் காணப்படுகிறது.