Home தமிழகச் செய்திகள் தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்குமார் அணி!

தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்குமார் அணி!

91
0

தமிழ்நாட்டின் திருச்சியில் நடைபெற்று வரும் 47வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி இதுவரை மொத்தம் நான்கு தங்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

CFP மாஸ்டர் ஆடவர் அணி நிகழ்வு, SDDP மாஸ்டர் ஆடவர் குழு நிகழ்வு மற்றும் 50 மீட்டர் எஃப்பி மாஸ்டர் ஆடவர் அணி நிகழ்வு உட்பட நான்கு குழு நிகழ்வுகளில் அஜித் தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

ஜூலை 24ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. திருச்சி கே.கே. நகரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 

இதில் மாஸ்டர் பிரிவில் நடிகர் அஜித் பங்கேற்று சுடுவது போன்ற படங்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் வருகை தரும் காணொளிகள், சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

துப்பாக்கி சுடும் போட்டி பிஸ்டல் பிரிவில் வெற்றி பெற்ற 162 நபர்களுக்கு ஓய்வு பெற்ற DGP தேவாரம் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் நேற்று வழங்கினார். 

இதில், நடிகர் அஜித் குமாரின் அணி,

  1. சென்டர் ஃபயர் பிஸ்டல் மாஸ்டர் ஆடவர் பிரிவு,
  2. ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு,
  3. 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு,
  4. ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு
  5. 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் ஆண்கள் பிரிவு,
  6. ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் பிரிவு
  7. ஆகிய பிரிவுகளிலேயே அஜித் அணி மேற்படி 6 பதக்கங்களையும் வென்றுள்ளது.

கடந்த ஆண்டு, சென்னையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் நடிகர் அஜித் ஆறு தங்க பதக்கங்களை வென்றிருந்தார் அன்பது குறிப்பிடத்தக்கது.