Home தமிழகச் செய்திகள் சென்னையில் “புலிகள் மாநாடு” – மு.க.ஸ்ராலின் அறிவிப்பு:

சென்னையில் “புலிகள் மாநாடு” – மு.க.ஸ்ராலின் அறிவிப்பு:

81
0

2022 அக்டோபர் மாதம் சென்னையில் ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசால், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும்என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக தளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கணக்குப்படி 264 புலிகளுடன் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 10 விழுக்காடு தமிழ்நாட்டில் தான் உள்ளது.

புலிகள் பாதுகாப்பில் தமிழகத்தின் முன்னோடி முயற்சிகளுக்குப் பொருத்தமாக 2022 அக்டோபர் மாதம் சென்னையில் ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசால், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.