Home முக்கிய செய்திகள் சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பித்தது இலங்கை.

சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பித்தது இலங்கை.

52
0

இலங்கைக்கு நிதி வழங்கும் எந்தத் திட்டமும் இல்லை என உலக வங்கி அறிவித்ததை தொடர்ந்து வேறு வழி இன்றி சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தையை இலங்கை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

சரியான நிதிக் கொள்கையின்மை, பொருளாதார நெருக்கடிக்கான சரியான தீர்வு இன்மை, மனித உர்மை மீறல் செயற்பாடுகள் போன்ற காரணங்களை காட்டியே “இலங்கையில் ஆழமான கட்டமைப்பு மாற்றங்கள்” உருவாகும் வரை நிதி வழங்க உலக வங்கி மறுத்திருந்தது.

இந்த நிலையில் ஜப்பானும் தம்மால் நிதியுதவி வழங்க முடியாது என தெரிவித்துள்ளதோடு, சர்வதேச நாணயநிதியத்துடன் இலங்கை பேச்சுக்களில் ஈடுபட்டு சாதகமான முடிவுகளை எட்டினால் அதன் அடிப்படையில் நிதிவழங்குவது தொடர்பில் தம் நாடும் ஆராயும் எனவும் தெரிவித்துள்ளது.