Home செய்திகள் சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட 12 பேர் கைது!

சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட 12 பேர் கைது!

43
0

சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட 12 பேர் வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து இன்று (30) அதிகாலை  கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக பயணிக்க முயன்றனர் எனும் குற்றச்சாட்டில் 8 ஆண்களும் 4 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.