இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை முதலாவது வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது.
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் இல் நடைபெற்றுவரும் குறித்த விளையாட்டு விழாவில் ஏழு (7) இலங்கை விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர்.
இன்று சனிக்கிழமை (30) காலை இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த “டிலங்க இசுருகுமார” என்பவர் ஆண்களுக்கான 55 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு 225 கிலோகிராம் எடையை தூக்கி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.
இதே வேளை, இலங்கை – கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிவான முதலாவது குத்துச் சண்டை வீரரான விற்றலி நிக்லஸ் இதே “பேர்மிங்ஹாம் 2022” பொதுநலவாய விளையாட்டு விழாவில் முதன் முறையாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.