
இங்கிலாந்தின் லிங்கொன்ஸெயார் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Lillia Valutyte என்ற சிறுமியே கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக லிங்கொன்ஸெயார் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 22 வயது சந்தேகநபர் ஒருவரை “பொஸ்டன் பார்க்” இல் வைத்து இன்று (30) சனிக்கிழமை மாலை 2:45 மணிக்கு கைது செய்துள்ளதாக லிங்கொன்ஸெயார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் மக்கள் பெருமளவில் கூடி மலர் செண்டுகளை வைத்து மெழுகுவர்த்திகளை கொழுத்தி தங்கள் அஞ்சலிகளை செலுத்திவருகின்றனர்.
