
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது ஆட்சியின் அறிமுகப்படுத்திய இலங்கை அரச கொடி ஐ திருடியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோட்டா கோ கம போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டு இருந்த வேளையில் அங்கு பெருந்திரளான மக்கள் சென்று பார்வையிட்டு வந்தனர்.
இந்த நிலையில் அங்கிருந்த கோட்டபாயவின் உத்தியோகபூர்வ ஆட்சிக் கொடியை திருடிச் சென்றச் நபரையே பொலிஸார் தற்போது கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர் அக் கொடியை எடுத்துச் சென்றது மட்டுமன்றி தனது படுக்கையின் விரிப்பாக அதனை பாவித்து அதன் மேல் படுத்திருந்து புகைப்படம் ஒன்றைஒ எடுத்ததோடு மட்டுமன்றி அதனை முகப்பு புத்தகத்திலும் பதிவிட்டிருந்துள்ளார்.
இந்த நிலையிலேயே மக்கள் எளுச்சி போராட்டம் தொடர்பான கடந்த மூன்று மாத காலமாக வெளிவந்த சமூக வலைத்தள பதிவுகள், காணொளிக் காட்சிகள் என்பவற்றை ஆராய்ந்துவரும் குற்ரத்தடுப்பு பிரிவினரிடம் குறித்த கொடி சம்பந்தமான படம் கிடைக்கவே அதன் அடிப்படையில் பொலிஸார் அவரை கைது செய்துள்னளர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் துறைமுக துறைமுக தொழில்சங்கத்தில் முன்னாள் தலைவரான களுதந்திரிகே உதேனி ஜயரத்ன என்பவரே கைதுசெய்யப்பட்டவராவார்.