சீனாவின் நிதி உதவியுடன் இலங்கையில் உருவாக்கப்பட்ட அம்பாந்தோட்ட துறைமுகத்திற்கு சீனக் கப்பல் ஒன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளமை தொடர்பில் தாம் அறிந்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
எமக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல்களில் அடிப்படையில், யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பல் தென் இலங்கைத் துறைமுகமான அம்பாந்தோட்டை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், ஆகஸ்ட் 11 ஆம் தேதி அங்கு சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு முன்னேற்றத்தையும் அரசாங்கம் கவனமாகக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது” என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வாராந்திர ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
