Home செய்திகள் ஜனாதிபதி மாளிகைக்குள் மக்களினால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை உடனடியாக ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு:

ஜனாதிபதி மாளிகைக்குள் மக்களினால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை உடனடியாக ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு:

58
0

ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களினால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் சிலர் அங்கிருந்த ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டு பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.

அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அப்போது வெளியாகியிருந்தன.

எனினும் அந்தப் பணம் இன்னும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படாதுள்ள நிலையில், இன்றைய தினம் அது தொடர்பில் உத்தரவிட்ட கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, பணத்தை உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததாக தெரிவித்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த நான்கு பேர் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் விடுவிப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.