28 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர், சமன் ஏக்கநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் 18 அமைச்சரவை அமைச்சர்கள் கடந்தவாரம் (22) பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர்.
இதில் ஒரு சில அமைச்சர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சுகள் வழங்கப்பட்டிருந்ததோடு, பாதுகாப்பு, நிதி அமைச்சுகள் ஜனாதிபதியின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, குறித்த அமைச்சர்களுக்கு பொறுப்பான அமைச்சுகள் மற்றும் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அது தவிர, குறித்த 18 பேரும் 23 அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும், பிரதமரின் செயலாளராக அநுர திஸாநாயக்கவின் நியமனமும் குறித்த அதி விசேட வர்த்தமானியில் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.