அரச பயங்கரவாதத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் கட்டவிழ்த்து விடும் அரசாங்கத்தோடு கூட்டு சேராமல் இருக்கவும், மக்கள் போராட்டத்தை தடுக்கவும், போராட்டம் நடாத்தும் உரிமைகளை முடக்க்கும் நோக்கோடும் போடப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராஉமன்றக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காணூம் முகமாக பாரா குழு முறமை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிப்பது எனவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.