Home உலக செய்திகள் கோட்டாபாய ராஜபக்‌ஷவை விசாரணைக்கு உட்படுத்துமாறு 17 அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்து:

கோட்டாபாய ராஜபக்‌ஷவை விசாரணைக்கு உட்படுத்துமாறு 17 அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்து:

61
0

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ வை சிங்கப்பூர் அரசாங்கம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என 17 அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

கடந்த 14 ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து தனது இராஜினாம கடிதத்தை இலங்கை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பியதன் பின் அவர் ஜனாதிபதிக்குரிய சிறப்புச் சலுகைகளுக்கு உரியவர் அல்ல என்றும், தொடர்ந்தும் வுடுபாட்டுரிமைக்கு உரியவர் இல்லை எனவும் குறித்த 17 அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் இதற்கமைய இலங்கையில் இடம்பெற்ற பாரதூரமான குற்றச்செயல்கள் தொடர்பில் கோட்டபாய ராஜபக்‌ஷவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும், பொருத்தமானால் வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் குறித்த 17 அமைப்புக்களும் கூட்டாக சிங்கப்பூரின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சர்வதேச விவகாரப் பிரிவின் சொலிஸிஸ்ரர் ஜெனரலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.