எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் கொள்வனவு நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்லார்.
ஏற்கனவே எரிபொருளுக்கான கட்டணங்களை செலுத்திய கப்பல்களே தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், இனி வரும் காலங்களுக்கான எரிபொருள் கொள்வனவிற்கான கட்டணங்கள் செலுத்தப்படாமையினாலும், அதற்கான நிதி இன்மையினாலும் அடுத்த மாதத்திற்கான எரிபொருள் (கொள்வனவு) இறக்குமதி கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் சீநாவிடருந்து இதுவரை சாதகமான பதில்கள் எதுவும் வராத நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டால் மட்டுமே ஏனைய நாடுகள் நம்பிக்கையோடு ஒத்துழைப்பை வழங்க முன்வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனால் ரணில் தனது ஆட்சி அதிகாரத்திற்காக அவசர அவசரமாக ஆடிய நாடகத்தின் ஆட்டம் நிறைவடைந்துள்ளமை புலனாகிறது.