Home உலக செய்திகள் இலங்கையில் தனியார் மற்றும் அரச துறைகளில் புதிய முதலீடுகளை செய்ய தாயார்: இந்தியா

இலங்கையில் தனியார் மற்றும் அரச துறைகளில் புதிய முதலீடுகளை செய்ய தாயார்: இந்தியா

10
0

மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள இலங்கையில், தனியார் மற்றும் அரச துறைகள் மூலம் பெருமளவு முதலீடுகளை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இதனடிப்படையில் துறைமுகங்கள், உட்கட்டமைப்பு தகவல் தொழில்நுட்பம் மற்றும் மீள் புதுப்பிக்கக்கூடிய ஹைட்றோகாபன் சக்தி போன்றவற்றில் கவனம் செலுத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை நான்கு (4) பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை இலங்க்கைக்கு வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ள அவர், இலங்கையில் முட்டுக்கட்டை நிலையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு திட்டத்திற்கான பேச்சுவார்த்தைகளை இலகுவாக்கும் முகமாக அரசியல் மட்டத்திலும், செயற்பாட்டளவிலும் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் உதவும் எனவும் தெரிவித்தார்.