நாளை (ஜூலை 25) முதல் மீள ஆரம்பமாகவுள்ள பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இரண்டுவகைப் படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (25) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி பாடசாலைகள் மீண்டும் தொடங்கும் போது மாணவர்கள் வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நேரில் சமூகமளிக்க வேண்டும்.
வாரத்தின் ஏனைய இரண்டு நாட்களான புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நட்களில் இணையவழி மூலம் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இது தொடர்பாக அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும், மேலதிக மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், பிராந்திய கல்விப்பணிப்பாளர்கள், பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் உதவிக் கல்விப்பணிப்பாளர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.