யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் காலை கறுப்பு ஜீலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் கறுப்பு ஜீலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு ,மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதன் போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள பிரதான கொடிக்கம்பத்தில் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.
39 வருடங்களின் முன் (1983 ஜூலை 23) இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு,மற்றும் திட்டமிடப்பட்ட தமிழர்கள் மீதான வன்முறைகளின் போது பாதிக்கப்பட்ட, உயிர்நீத்த உறவுகளுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை,
அடக்குமுறைகளும், தமிழின அழிப்பும் தற்காலத்திலும் தொடர்ந்தே செல்கிறது. இவைக்கு எதிராக நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். எம் இனத்தையும், எம் மண்ணையும் பாதுகாக்கும் பொறுப்பில் இளைய சமூகத்தினராகிய எமது பங்கு இன்றியமையாததும், தவிர்க்கமுடிதாததும் ஆகும். என உறுதி பூணடனர்.
