Home செய்திகள் பாதுகாப்பு செயலாளராக “கமால் குணரட்ண” மீண்டும் நியமனம்!

பாதுகாப்பு செயலாளராக “கமால் குணரட்ண” மீண்டும் நியமனம்!

69
0

ராஜபக்‌ஷேக்களின் ஆட்சியின் போது பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவை மீண்டும் அதே பதவியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

கோட்டபாய ராஜபக்‌ஷவின் வலது கையாகவும், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது கொடூரமான போர்க்குற்றங்களை செய்தவர் எனும் குற்றச்சாட்டிற்கு உள்ளகியுள்ளவருமான கமால் குணரட்ண கடந்த காலங்களில் ராஜபக்‌ஷேக்களின் பாதுகாவலனாக செயற்பட்டு வந்தார் என்பதும், அவரது உதவியோடே அண்மையில் கோட்டபாய ராஜபக்‌ஷ இராணூவ விமானம் மூலம் நாட்டைவிட்டு தப்பியோடி இருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.