Home தாயக செய்திகள் ஜனாதிபதி முன்னிலையில் 18 அமைச்சர்கள் பதவி ஏற்பு!

ஜனாதிபதி முன்னிலையில் 18 அமைச்சர்கள் பதவி ஏற்பு!

55
0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் புதிய அமைச்சரவையை சேர்ந்த 18 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.

இன்று (22) வெள்ளிக்கிழமை காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த பதவியேற்பு நிகழ்வில் புதிய பிரதமராக தினேஸ் குணவர்த்தன ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து புதிய அமைச்சரவையை சேர்ந்த 18 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.

  1. 1. கல்வி அமைச்சர் – சுசில் பிரேமஜயந்த
  2. 2. சுகாதாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் – ஹெகலிய ரம்புக்வெல
  3. 3. காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் – ஹரீன் பெர்னாண்டோ
  4. 4. கடற்றொழில் வழங்கல் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா
  5. 5. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல்ல குணவர்த்தன
  6. 6. விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்புதுறை அமைச்சர் – மஹிந்த அமரவீர
  7. 7. நீதி, அரசிலமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் – விஜயதாஸ ராஜபக்‌ஷ
  8. 8. கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் – ரமேஸ் பத்திரண
  9. 9. நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க
  10. 10. வெளிவிவகாரத்துறை அமைச்சர் – அலி சப்ரி
  11. 11. பெளத்தமதம், மற்றும் மதவிவகார அமைச்சர் – விதுர விக்கிரமனாயக்க
  12. 12. வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் – காஞ்சன விஜயசேகர
  13. 13. சுற்றாடல்துறை அமைச்சர் – நசீர் அஹமட்
  14. 14. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – ரொஷான் ரணசிங
  15. 15. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் – மனுஷ நாணயக்கார
  16. 16. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ்
  17. 17. வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் – நளின் பெர்னாண்டோ
  18. 18. உள்ளூராட்சி மற்றும் அரச நிர்வாக அமைச்சர் – தினேஸ் குணவர்த்தன (புதிய பிரதமர்)

பெரும்பாலானோருக்கு ஏற்கனவே வகித்த அமைச்சுகளே மீண்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜீ.எல். பீரிஸ் வகித்த வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.