Home செய்திகள் இன்று (22) அதிகாலை காலி முகத்திடலில் கைதான 9 பேரும் பிணையில் விடுதலை:

இன்று (22) அதிகாலை காலி முகத்திடலில் கைதான 9 பேரும் பிணையில் விடுதலை:

63
0

இன்று (22) அதிகாலை காலி முகத்திடலில் வைத்து கைது செய்யப்பட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் பலர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தநர். சட்டத்தரணிகளின் துரித நடவடிக்கையல் நீதவான் அவர்களை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

இராணுவம் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் மூலம், காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகம் மற்றும் அதன் பிரதான நுழைவாயிலுக்கான தடைகளை நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும், இதன்போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக 9 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்திருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் நிஹால் தல்தூவ குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இச்சம்பவத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.